அரசு மருத்துவமனையில் குழந்தை இதய மாற்று அறுவை சிகிச்சை

  Newstm News Desk   | Last Modified : 10 Jun, 2018 12:56 pm

first-ever-pedeatric-heart-transplant-in-tn-government-hospital

ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 10 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முனுசாமி, ஜெசி தம்பதியரின் 10 வயது மகன் பிரவீண்குமார். இந்தச் சிறுவனுக்கு 7 வயதாக இருக்கும்போது இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மருந்து உட்கொண்டு வந்தாலும், இறுதியாக இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனைகளில் செலவழிக்க பண வசதி இல்லாமல் தம்பதியர் தவித்து வந்தனர். அந்தப் பகுதி எம்.எல்.ஏ பரிந்துரைக் கடிதத்தின் பேரில் சிறுவன் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனுக்கு இதயத் தசைகள் விரிவடைந்ததினால், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான பட்டியலில் சிறுவனின் பெயர் பதிவு செய்யப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அதன் அடிப்படையில், 26 வயதான மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட இதயம் சிறுவனுக்கு மே 24ந்தேதி பொருத்தப்பட்டது. நான்கு மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்பு சிறுவன் நலமுடன் உள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் இதுவரை 6 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான இதய மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது அரசு மருத்துவமனைகளில் இதுவே முதன்முறையாகும்.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close