ஜெயலலிதா போல ரஜினியை எதிர்பார்க்க வேண்டாம்: தினகரன்

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 11:07 pm
dont-expect-rajini-to-be-like-jayalalitha-ttv

ஜெயலலிதா போல ரஜினி வருவார் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையிலயே தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் கர்நாடகத்திடம் சொல்லி ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" எனறார்

மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கூறிய டிடிவி தினகரன், அம்மாவை போல் ரஜினியை யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் 90 சதவீத தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் தினகரன் கூறினார்.

காவிரி பிரச்னை என்பது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை என்பதால் விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் கலப்பு இன்றி பங்கேற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தினகரனும் ஸ்டாலினும் ரகசிய உடன் பாடு வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு நிலையில் தி.மு.க தான் தங்களின் பிரதான எதிர்க்கட்சி என்றும் தினகரன் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close