ப்ராமனாள் கஃபே என்று பெயர் வைப்பதில் என்ன தவறு: உயர்நீதிமன்றம் கேள்வி

  shriram   | Last Modified : 11 Jun, 2018 01:30 pm
community-names-in-hotels-is-not-illegal-madurai-high-court-bench

சாதி பெயர் வைத்த ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, பெயரை அழிக்க முயன்றவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, ஹோட்டல்களுக்கு சாதி பெயர்கள் வைப்பதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தது.

4 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் உள்ள 'ஸ்ரீ கிருஷ்ணா ப்ராமனாள் கஃபே' என்ற ஹோட்டலுக்கு எதிராக பெரியார் திராவிட கழகத்தின் சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஹோட்டலின் பெயரை அழிக்க முயற்சி செய்தனர். இதைத் தொடர்ந்து 112 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது நீதிபதிகள், "ஒரு ஹோட்டலுக்கு சாதி பெயர் வைப்பது சாதாரண விஷயம் தான். அது அரசியல் சாசனத்தின் படி அந்த ஹோட்டல் உரிமையாளரின் தனிப்பட்ட உரிமை. மதுரையில் பல ஹோட்டல்களுக்கு சாதி பெயர்கள் உள்ளன. கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை என பல சாதி பெயர்கள் கொண்ட கடைகள் இருக்கையில் இந்த ஹோட்டலுக்கு மட்டும் எதிராக எதற்கு போராட்டம்? ஹோட்டலில், தீண்டாமை இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டாலோ, அது தான் குற்றம்" என்றார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டர்வகள் எந்த வன்முறையிலும் ஈடுபடாத காரணத்தாலும், ஏற்கனவே அனைவரும் 22 நாட்கள் சிறையில் இருந்ததாலும், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தனர். மாநிலத்தின் பல பகுதிகளில் இருக்கும் அவர்கள் கிரிமினல் வழக்கை சந்திப்பது கடினம் என்பதாலும் இந்த முடிவெடுப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close