இன்று முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 08:42 am
jactto-geo-going-to-protest-from-today

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பபோராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, ஜூன் 11ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தவும், அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close