தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 10:57 am
unidentified-persons-attacked-p-maniarasan

காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான பெ.மணியரசன் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மற்றும் காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான  பெ.மணியரசன் நேற்று இரவு தஞ்சையில் இருந்து சென்னை வரும் பொருட்டு, வீட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். தனது உதவியாளருடன் பைக்கில் சென்ற அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் தள்ளிவிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பைக் கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மணியரசன் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close