ஸ்டெர்லைட் ஊழியர்களுக்கு மாற்று வேலை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 02:02 pm
another-job-is-going-to-allocate-the-sterlite-employees-says-thoothukudi-collector

ஸ்டெர்லைட் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வலைத்தளம் ஒன்று தொடங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் தமிழக அரசின் உத்தரவின் பேரில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். 

இதையடுத்து அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க ஒரு வலைத்தளம் தொடங்கப்படும். அந்த வலைதளத்தில் தொழிலாளர்கள் தங்கள் விபரங்களை கொடுக்க வேண்டும்.அதன்படி, அவர்களுக்கு வேறு தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும். 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதற்காக தனித்தனியாக துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close