11-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

  முத்துமாரி   | Last Modified : 11 Jun, 2018 03:49 pm

11-06-2018-newstm-top-10-news

11-06-2018 இன்றைய டாப் 10 செய்திகளின் தொகுப்பு!

பசுமை வழிச்சாலை அமைப்பதில் என்ன தவறு?- முதல்வர்

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி, "சென்னை- சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு என்ன அவசியம் ஏற்பட்டு விட்டது" என்று கேள்வி எழுப்ப அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பசுமை வழிச்சாலை அமைப்பதில் என்ன தவறு இருக்கிறது?" என கேட்டு அதற்கு விளக்கமளித்தார். 

பிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு மாற்றம்

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் மொழிப்பாடத்தை ஒரே தேர்வாக நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மொழிப்பாடம், முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தேர்வுகளாக நடத்தப்படும முறை மாற்றப்பட்டு இனி ஒரே தேர்வாக நடத்தப்படும்.

ஸ்டெர்லைட் ஊழியர்களுக்கு மாற்று வேலை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

"ஸ்டெர்லைட் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வலைத்தளம் ஒன்று தொடங்கப்படும். அந்த வலைதளத்தில் தொழிலாளர்கள் தங்கள் விபரங்களை கொடுத்தால் அவர்களின் தகுதிக்கேற்ப வேறு தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும்"  என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

கோரக்பூர் சம்பவம்: மருத்துவர் கபீலின் சகோதரர் மீது தாக்குதல்!

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் வரையில் உயிரிழந்தன. இந்த சம்பவத்தின் போது தன் சொந்த முயற்சியில் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர் கஃபீல் கானின் சகோதரர் மீது நேற்று மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

பகுஜன் சமாஜுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்கத் தயார்: அகிலேஷ்

பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி தொடரும் எனவும், வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க, பகுஜன் சமாஜ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் அளிக்கத் தயார் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

பா.ஜ.கவின் மூத்த தலைவரும், இந்தியாவின் 10வது பிரதமருமான வாஜ்பாய் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ரன்தீப் குலேரியாவின் மேற்பார்வையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பிக் பாஸ் 2-வை நிராகரித்த ஆர்யாவின் காதலி!

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் ஆர்யாவின் காதலியாக வர்ணிக்கப்பட்ட அபர்ணதி, ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வந்த அழைப்பை நிராகரித்துள்ளார். “நானே சமைத்து சாப்பிடுவது எல்லாம் எனக்கு செட்டாகாது! அதுமட்டுமில்லாமல், ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியே எனக்கு ஒத்துவராத நிகழ்ச்சி, அதனால் தான் நிராகரிச்சுட்டேன்” என்கிறார் அபர்ணதி.

’2.0’ படம் இந்த வருடம் வர வாய்ப்பில்லை!

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் ’2.0’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகிறது! இந்த வருடத்தில் படம் வர வாய்ப்பிலை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

வர்ணனையாளராகும் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர்!


பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும்  துணை கேப்டன் ஆகியோர் பதவி விலகினர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்து இருந்தது. இதனையடுத்து அவர்கள் கனடா நாட்டில் நடக்கும் குளோபல் டி20ல் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் டேவிட் வார்னர், வர்ணனையாளர் மாற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு சேனல் நைன் அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவை விட எங்களிடம் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர்: அஸ்கார் ஸ்டானிக்ஜாய் 


ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்ககொள்ள உள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை புகழ்ந்து பேசி வரும் நிலையில் இந்திய அணியை விட தங்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் கூறியுள்ளார். மேலும் வங்கதேசத்திடம் அடைந்த வெற்றியால் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close