ஸ்டாலின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: தி.மு.க வெளிநடப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 03:54 pm
stalin-and-dmk-members-left-assembly

பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து ஸ்டாலின் பேசிய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

சட்டபேரவையில் இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி "பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர், "இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் போராடி அனுமதி பெற்றுள்ளோம். இதனை நிச்சயம் செயல்படுத்துவோம் என்றார். அப்போது குறிக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், "தூத்துக்குடி போல மேலும் ஒரு சம்பவம் நடக்க கூடாது. மக்களிடம் கருத்துக்கேட்டு பின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்". என்றார். 

இந்நிலையில் தற்போது அவர் பேசிய 'தூத்துக்குடி போல" என்பது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து தி.மு.க வினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவை வளாகத்தில் ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "மக்கள் தொடர்ந்து அனைத்திற்கும் போராட்டம் நடத்துகிற சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த பசுமை வழிச்சாலை விவகாரத்தில் தூத்துக்குடி போல மக்கள் பெரிய போராட்டம் நடத்தும் நிலை வந்து விட கூடாது என்று நான் கருத்து கூறினேன். இதனை நான் பகல் 11.30 மணியளவில் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது கூறினேன்.

பின்னர் 1.30 மணியளவில் நான் பேசிய 'தூத்துக்குடி போல;' என்பதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். நான் அவரிடம் இது நியாயமா? நான் பேசிய வார்த்தைகளில் தவறு இல்லை. அதனை நீக்க கூடாது என்று கேட்டேன். ஆனால் அவர் எங்கள் கோரிக்கையை எற்றுக்கொள்ளவில்லை. இதற்கு முன்னர் பல முறை முதல்வர் தூத்துக்குடி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நான் பேசியதை மட்டும் தற்போது நீக்கி உள்ளனர். எனவே முதல்வரின் பதிலுரையை தி.மு.க புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறது" என்றார். 

மேலும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "இது இந்த அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close