கணவனின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த மனைவி! நடந்தது என்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jun, 2018 11:57 pm
wife-killed-husband-in-kanchipuram

காஞ்சிபுரம் அருகே கணவனின் தலையில் மனைவியே அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை ராஜன் நகர் பகுதியில் திருமுருகன் - சுந்தரி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன் குடித்துவிட்டு வருவதும், பின் மனைவி சண்டையிடும்வதும் இவர்கள் வீட்டிலும் தினமும் நிகழும் எபிசோட். ஆனால் இங்கு கிளைமாக்ஸ் கொஞ்சம் சீரியஸாகி கொலையில் முடிந்துள்ளது.

கூலி தொழிலாளியான திருமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து சண்டையிடுவது போல அன்றும் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வீட்டிலிருந்த அம்மி கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டு உள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமுருகன் உயிரிழந்தார். இதை பார்த்த குழந்தைகள் இன்றும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. குடும்பத்தில் சண்டை வருவது சகஜம் தான் அதற்காக அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யும் அளவிற்கு சண்டை தீவிரமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி கைது

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், சுந்தரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குடிப் பழக்கத்தால் இன்று குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. அரசாங்கம் டாஸ்மாக்கில் கிடைக்கும் பணத்தை வைத்து இலவசங்களைத் தந்து மக்களை ஏமாற்றுகிறது. ஏழைகளும் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே டாஸ்மாக்கில் தொலைத்துவிடுகின்றனர். கடைசியில் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. டாஸ்மாக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவோம் என்று அறிவித்தனர். இதன்படி, வருவாய் இல்லாத கடைகளாகப் பார்த்து மூடுகின்றனர்.

மக்கள் மீது அக்கறை இருந்தால், இந்நேரத்துக்கு மக்கள் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை சில நூறாக குறைந்திருக்கும். ஆனால், அரசுக்கு டாஸ்மாக் பணத்தின் மீதுதான் ஆசை என்பதால்தான் மதுக்கடைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close