ஊழலின் மொத்த உருவம் ஜெயலலிதா- ஈவிகேஎஸ். இளங்கோவன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jun, 2018 09:46 pm

evks-elangovan-accusation-on-jayalalithaa

ஊழலின் மொத்த உருவமாகவும், நாட்டை கேவலமாகவும் வழிநடத்தியது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ். இளங்கோவன், “தமிழகத்தில் தற்போது கலைஞர் போல் அரசியல் கட்சி தலைவர் இல்லையே என்ற வேதனை ஏற்படுகிறது. தற்போதுள்ள ஆளும்கட்சி அரசியலில் படுபாதாளத்தை நோக்கி நகர்கிறது. பட்டித் தொட்டி எல்லாம் மோடியின் ஆட்சிக்கு எதிராக பேச்சு நிலவி வருகின்றது. இன்று மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் சிறப்பான தலைவர்கள் பெயர்கள் எழுதப்படுமேயானால் கண்டிப்பாக கலைஞர் கருணாநிதி பெயரும் இடம்பெறும். பெரியாரின் உண்மையான பேத்தி கனிமொழி தான்” என கூறினார். 

மேலும் பேசிய அவர், “இனி தமிழகத்தில் அடுத்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தான் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஊழலின் மொத்த உருவமாகவும், நாட்டை கேவலமாகவும் வழிநடத்தியது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். 

இன்று நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். சசிகலா குடும்பத்தில் ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றனர், இது போன்ற நிகழ்வு எந்த மாநிலத்திலாவது நிகழ்ந்ததுண்டா?” என கேள்வி எழுப்பினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close