தி.மு.க அழிந்துவிடும் என தி.மு.கவே நம்புகிறது: பொன்னார்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 02:33 pm
pon-radhakrishnan-says-m-k-stalin-bunks-assembly-like-a-school-student

தி.மு.க வரும் காலத்தில் அழிந்துவிடும் என்று அக்கட்சியினரே நம்புகின்றனர் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் புதிய சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் சாலை திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு சாலை திட்டங்களை அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்படவுள்ள ரயில் பாதை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.

எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று என்னிடம் கேள்வி எழுப்புகிறீா்கள். அவரை கைது செய்ய வேண்டியது காவல் துறையின் பொறுப்பு. தமிழக அரசு, காவல் துறையிடம் இது குறித்து கேள்வி எழுப்புங்கள். தமிழக அரசு கையில் காவல்துறை சிக்கி உள்ளது. போலீஸ் அடித்ததை பற்றி மட்டும் பேசுகிறார்கள். போலீசை அடித்ததை பற்றியும் பேச வேண்டும். 

மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் அமைந்துள்ள குமாரசாமியின் அரசு மேலாண்மை ஆணையத்திற்கான மாநில பிரதிநிதிகளைக்கூட நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பள்ளி மாணவா்களை போன்று சட்டப்பேரவையை 'கட்' அடிக்கும் தமிழக எதிர்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கா்நாடகாவிற்கு சென்று குமாரசாமியிடம் இதுகுறித்து வலியுறுத்த வேண்டும்.

கிழக்கு மாவட்ட மக்கள் கழகங்களுக்கு வாக்களித்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் காலத்தில் தி.மு.கவில் இருந்து பாதி பேர் வெளியேறுவார்கள் என்று முக்கிய தி.மு.க ஆள் ஒருவர் கூறியிருக்கிறார். தி.மு.க அழிந்துவிடும் என்று தி.மு.கவே நம்புகிறது. அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக பா.ஜ.க இருக்கும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close