2018-19 ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 01:11 pm
public-exam-dates-announced-by-minister

தமிழகத்தில் 2018-19 ஆண்டுக்கான பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை இன்று அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். 

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "2019ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவித்தார். 

12ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. அதன் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும்.  11ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 6ம் தேதி தொடங்கும். இதன் முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும். 

எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் 14ம் தேதி நடக்கும் என்றும் அதன் முடிவுகள் மே மாதம் 29ல் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும்,  11ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இனி 6 தேர்வுகள் மட்டும் தான் நடைபெறும். மதிப்பெண் குறைக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் இருக்கும். தமிழகத்தில்  5,500 ஸ்மார்ட் வகுப்புகளும், 1400 பள்ளிகளில் நீட் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close