13-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 08:31 am
13-06-2018-today-s-top-stories

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நடத்திய வரலாற்றை சிறப்பு மிக்க பேச்சுவார்த்தைக்கு பின், அணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒப்புதல் அளித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் அரசும் தலிபான் தீவிரவாத அமைப்பும் ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட முதல் நாளே தலிபான் நடத்திய தாக்குதல் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 2018-19 ஆண்டுக்கான பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை இன்று அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் 14ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 6ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதியும் துவங்குகின்றன. 

மத்திய பிரதேச மதகுரு பாயுஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில் மத்திய பிரதேச அரசு சர்ச்சைக்குரிய முறையில் அமைச்சர் பதவி வழங்கிய நிலையில், அதை அவர் ஏற்க மறுத்திருந்தார். 

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அது முழுக்க முழுக்க ஆன்லைனில் வெளிப்படையாக நடப்பதால், எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் கூறினார். 

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நேரில் பார்க்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் ஒரு தொண்டனாக சென்றதாகவும், நாட்டுக்காக வாஜ்பாய் உழைத்ததால், காங்கிரஸ் கட்சி அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close