சென்னையில் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 01:00 pm

shift-system-introduces-for-chennai-police

சென்னையில் இரவில் நடைபெறும் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறையில் பணி வழங்கப்படவுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தற்போது வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இரவு நேரங்களில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்க ஆணையர் விஸ்வநாதன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, "சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்க முழு நேரமும் காவல் பணியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோருக்கு கீழ் உள்ள காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை வழங்கப்படுகிறது. மேலும்,  ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 2 இணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் கண்காணிப்பு நிகழும். இந்த நடைமுறை வருகிற 30ம் தேதி வரை அமலில் இருக்கும்" என தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close