ஸ்டெர்லைட்டை மூடுவது தொடர்பான ஆணை குழப்பாக உள்ளது: நீதிபதிகள் கருத்து

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 02:09 pm
tn-govt-order-against-sterlite-is-not-clarity-says-madras-hc-judges

ஸ்டெர்லைட் ஆலையினை மூடுவது தொடர்பான அரசாணையில் தெளிவு இல்லை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிடவேண்டும்  என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணை தெளிவாக இல்லை எனவும்,  எனவே ஆலையினை நிரந்தரமாக மூடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வைகோ, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 18 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதிகள், "ஸ்டெர்லைட் ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணை திருப்தியாக இல்லை. ஒருவித குழப்பத்துடனே விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட, அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிடவேண்டும்.. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு என்பது ஈடாகாது. மனித உயிருக்கான விலை அவ்வளவு தானா? முன்னதாக உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதில் இருந்தே ஸ்டெர்லைட்டினால் சுற்றுசூழல் எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என தெரிகிறது. இதன் காரணமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளனர். பின்னர் வழக்கின் விசாரணை ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையின் ஏஜெண்டாக செயல்பட இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அ.தி.மு.க அரசு பக்கபலமாக இருப்பது எனக்கு தெரியும். மக்களை ஏமாற்றும் நோக்கில் அரசு இந்தமாதிரியான ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு செய்த கபடநாடகம் நீதிமன்றம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்" என தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close