13-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 04:19 pm

13-06-2018-newstm-top-10-news

13-06-2018 இன்றைய டாப் 10 செய்திகளின் தொகுப்பு!

குழப்பமான அரசாணை - நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தைதொடர்ந்து அதனை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்தது. இந்நிலையில், அந்த அரசாணையில் தெளிவு இல்லை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிடவேண்டும்  என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஷிஃப்ட் முறையில் வேலை

சென்னையில் இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறையில் பணி வழங்கப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

தி.மு.க இன்றும் வெளிநடப்பு

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தி.மு.வினர் இன்று சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், தலைமை செயலரின் உறவினர் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

காங்கிரசுக்கு மேலும் ஒரு தொகுதி

கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குபதிவுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளுமான சௌமியா ரெட்டி வெற்றியடைந்தார். அவர் 54,046 வாக்குகள் பெற்றிருந்தார். 

மோடியின் ஃபிட்னெஸ் வீடியோ


 
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்று இன்று பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டார். மேலும் அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி, மணிக்கா பத்ரா ஆகியோருக்கு ஃபிட்னெஸ் சேலஞ்ச் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது. 

மீண்டும் நஸ்ரியா


திருமணமாகி 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு நடிகை நஸ்ரியா நடித்திருக்கும் மலையாள படம் 'கூடே'. நஸ்ரியாவை மீண்டும் வரவேற்கும் விதத்தில் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் ஆராரோ பாடலின் டீசரை 'நஸ்ரியா வெல்கம் பேக்' பாடல் என்று படக்குழு வெளியிட உள்ளது. 

40 ஆண்டுகளுக்கு மாஸ்கோவில் தமிழ் படம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு சவுதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் காலா பெற்றிருந்தது. சவுதியை தொடர்ந்து ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் காலா வெளியாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்கோவில் வெளியாகும் முதல் தமிழ்படம் என்ற பெருமையை காலா பெற்றள்ளது. 

சர்ச்சை இயக்குநர் படத்தில் நயன்தாரா

லட்சுமி, மா என சர்ச்சைக்குள்ளான குறும்படங்களை இயக்கியவர் சர்ஜுன். இவர் தற்போது நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இது நயன்தாராவின் 63வது படமாகும். இது முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

ஆசிய செஸ் போட்டியை புறக்கணித்த இந்திய கிராண்ட்மாஸ்டர்

இந்தியாவின் மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டர் சௌமியா ஸ்வாமிநாதன் (29). ஈரானில் நடைபெற உள்ள ஆசிய டீம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தார். அங்கு விளையாடச் செல்லும் பெண்களும் கட்டாயம் தலையங்கி அணிய வேண்டும். இதனிடையே அது தன்னுடைய உரிமைக்காக அந்த போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார். 

நான் இந்தியாவின் மெஸ்ஸி அல்ல: சுனில் சேத்ரி

சுனில் சேத்ரி கடந்த வாரம் நடந்த கென்யாவிற்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்தார். அதன் மூலம் மொத்தமாக 64 கோல்கள் அடித்து மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் அவருக்கு இந்தாண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய சுனில்,  "என்னை மெஸ்ஸியோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். நான் இந்திய கால்பந்து உலகத்தின் மெஸ்ஸி அல்ல" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close