முதல்வரை சந்திக்க பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 06:38 pm

jactto-geo-protesters-are-arrested-by-police-today

முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டம் நடத்திய அவர்கள்  கடந்த 11ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்து பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படுகிறது. 

3ம் நாளான இன்றும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டாலினை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் இன்று அவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முதல்வரை சந்திக்கும் நோக்கில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். நேப்பியர் பாலம் அருகே வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணியாக செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். மீறி சென்ற அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close