ஊழல் புகார்.... அமைச்சரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடிக்கு செக்!

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 07:00 pm

dmk-files-complaint-with-acb-against-chief-minister-edapadi-palanisamy

அதிமுக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் பதவி மட்டுமல்லாமல் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என பணம் கொழிக்கும் அரை டஜன் துறைகளை தன் வசம் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், சாலை போடும் ஒப்பந்தங்களை சட்டத்திற்கு புறம்பாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கி, பல ஆயிரம் கோடி ஊழல் செய்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப்புகாரில், "ரூ. 5,000 கோடி மதிப்பிலான சாலை போடும் ஒப்பந்தங்களை, தனது உறவினர்களும், பினாமிகளும் நடத்தும் நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றும் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீதும் அவர்களது பினாமிகள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஜெயந்த முரளியை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சென்னை - சேலம் 8 வழிச்சாலையின் ஒப்பந்தம் கூட, எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவேதான், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

 சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது ஆளுங்கட்சிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close