போதைக்கு அடிமையாக்கி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! நடந்தது என்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Jun, 2018 06:57 am

student-sexual-harassment-at-thiruvallur

திருவள்ளூரில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு போதைக்கு அடிமையாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.

போதைக்கு அடிமையான 15 வயது சிறுமி

திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். சிறுமிக்கு பள்ளியில் படிக்கும்போதே ஆண் நண்பர்களின் பழக்கம் இருந்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து பள்ளியிலே மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார் என பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கு 25 ஆண் நண்பர்கள் பழக்கம் என்றும், அவர்களுடன் அடிக்கடி சிறுமி வெளியில் செல்வது தொடர்கதை என்றும் உடன்படிக்கும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

நடந்தது என்ன?

கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது சிறுமியின் செயல்பாடுகளை கண்காணித்த பெற்றோர்கள் அவருக்கு போதைப் பழக்கம் இருப்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சிறுமி, பெற்றொரிடம் சண்டையிட்டு அப்பகுதியில் இருக்கும் அவரது பள்ளி தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். தோழி வீட்டிற்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி

பெற்றோரின் புகாரையடுத்து சிறுமியை தேடிய காவல்துறையினர் அதேபகுதியில் மதுபோதையில் தள்ளாடியப்படி திருவள்ளூரில் கோவில் அருகே பெண்ணை மீட்டனர். சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், அவரது நண்பர்களான ராஜேஷ், நவீன்குமார் உள்பட 6 பேர் சிறுமிக்கு மது மற்றும் கஞ்சா கொடுத்து போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆறு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மாணவியுடன் பழகிய மற்ற ஆண் நண்பர்களுக்கு இந்த குற்றத்தில் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close