14-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்

  Newstm News Desk   | Last Modified : 14 Jun, 2018 04:59 am

14-06-2018-today-s-top-stories

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்ற டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இன்று மதியம் 1 மணியளவில் தீர்ப்பளிக்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் நூறுகோடி மக்களுக்கும் அதிகமானோர் பார்க்கும் 2018 ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில்,தொடரை நடத்தும் ரஷ்யா,  சவுதி அரேபியாவுடன் மோதுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் சாம்பா மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன்  நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்கள் 4 பேர் வீர மரணமடைந்தனர். 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு ஜெயநகரில் தொகுதியில் நடந்த இடைதேர்தலில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளான காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி, சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் பி.என்.பிரலாத்தை தோற்கடித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பில், வடகொரியா மீதுள்ள பொருளாதார தடைகளை நீக்க ட்ரம்ப் உறுதியளித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய தரப்பில் அணு ஆயுதங்களை விட்டுக்கொப்பது பற்றி எந்த உறுதியான திட்டத்திற்கும் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், தடைகளை நீக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவில் கால்பந்து உலகக் கோப்பை துவங்கவுள்ள நிலையில், 2026ம் ஆண்டின் உலகக் கோப்பையை வடஅமெரிக்க நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ சேர்ந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன. 

ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜுலென் லோபெட்கி உலகக் கோப்பை முடிந்தவுடன் பிரபல ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து கழகம் அவரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர், தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close