14-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 04:36 pm

14-06-2018-top-10-news

தப்பினார் இபிஎஸ்!


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீதிபதி சுந்தர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திர பானர்ஜியும் இருவேறு தீர்ப்பை கூறினர். எனவே இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமி அரசு தப்பித்துள்ளது. 

பின்னடைவு இல்லை: தினகரன்


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தினகரன், " தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல. ஆனால் புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சபாநாயகர் உத்தரவில் தலையிடக்கூடாது என்று கூறிய அதே நீதிபதி புதுச்சேரி சபாநாயகர் உத்தரவில் தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை அவர் எவ்வாறு மறுக்க முடியும்? ஆனால் நீதிபதி சுந்தர், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என சரியாக கூறியுள்ளார். தற்போது வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமன ரத்து


மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி லீவ் எடுக்கும் பிரதமர்


மோடி பிரதமராகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவர் 19 முறை தான் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளாராம். பல முக்கிய விவாதங்கள் நடைபெற்ற போது அவர் இந்தியாவிலேயே இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. டெல்லி  உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

உயிரோடு இருந்த நாய் மீது சாலை 


உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சையத் கிராஸிங் என்ற இடத்திலிருந்து தாஜ்மஹால் நோக்கி உள்ள சாலை புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையோரம் உறங்கி கொண்டு இருந்த நாய் ஒன்று இருப்பதை கவனிக்காமல் அதன் மீது கொதிக்கும் தாரை ஊற்றி ரோடு ரோலர் மூலம் சாலையை சமன் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் அந்த நாய் நசுங்கி உயிரிழந்துள்ளது.

அஜித்தின் விஸ்வாசம் லுக்


விஸ்வாசம் படத்தில் அஜித் இரண்டு கெட்அப்பில் நடிக்கிறார். இதில் ஒரு கெட்அப் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார். இதுதான் இன்று இணைய ஹிட்.

நயனுக்காக காதலர் எழுதி பாடல்


நயன்தாரா நடித்திருக்கும் கோலமாவு கோகிலா படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய ஒரேயொரு பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது. பாடல் ஆசிரியராக விக்னேஷ் சிவனுக்கு இது 30வது பாடலாகும்.

தவான் சாதனை


ஆப்கானிஸ்தான்- இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் அமர்விலேயே தவான் சதமடித்தார். இதன் மூலம், முதல் அமர்விலேயே சதமடித்த முதல் இந்திய வீரர் மற்றும் உலகளவில் ஆறாவது வீரர் என்ற சாதனையை தவான் பெற்றுள்ளார்.

சஞ்சிதா சானு, யுகி பாம்ப்ரி நீக்கம்


காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் சஞ்சிதா சானு மற்றும் டென்னிஸ் வீரர் யுகி பாம்ப்ரி, டாப் (டார்கெட் ஒலிம்பிக் போடியம்) திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

உருகும் பனிமலை


பூமி வெப்பமடைந்து  அண்டார்டிகாவில் உள்ள பனிமலைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் நீரின் உயரம் உயர்ந்து வருகிறது. சில சமயங்களில் இந்த  பனிக்கட்டிகள் உடைந்து பிரிந்து விடுகின்றன. இதனிடையே கடந்த 18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனிமலை விரைவில் மொத்தமாக காணாமல்போய்விடும் என்று நாசா தெரிவித்துள்ளது

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close