சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

  சுஜாதா   | Last Modified : 16 Jun, 2018 06:50 am
rain-will-continue-for-next-2-to-3-days

சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று  வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:- சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வெப்பத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலையில் மழை பெய்தது. இன்னும் 3 நாட்களுக்கு மாலையில் மழை பெய்யும். இந்த மழை தென்மேற்கு பருவ மழை இல்லை.

இது வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழை. கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 32 மி.மீ. பெய்துள்ளது. சராசரியாக பெய்ய வேண்டிய மழை 27 மி.மீ.

தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

தென் மாவட்டங்களிலும், சில வட மாவட்டங்களிலும் காற்றின் வேகம் கடலில் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். அதன் காரணமாக மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close