சேலம் 8 வழிச்சாலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கூறிய நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 277.3 கிலோ மீட்டர் தூரம் அமைய உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுமார் 40,000 வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இடிக்கப்படும்.
இதற்கு ஏராளமான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சட்டமன்றத்திலும் இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக சேலம் தீவட்டிபட்டி போலீசாரால், நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டியில், "எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்று விட்டு சிறைக்கு செல்வேன்" என்று கூறியிருந்தார்.