ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் வெளியேற்றும் பணி தொடக்கம்: சந்தீப் நந்தூரி

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 11:32 am
the-process-of-removing-leakage-of-sulfuric-acid-insterlite-plant-has-begun-says-collector-sandeep-nandoori

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. நாளை பிற்பகலுக்குள் இந்தப்பணி முடிவடையும் என மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசின் ஆணையின்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன்பின்னர் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெயினரில் இருந்து கந்தக அமிலம் கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, "ஆலையில் இருந்து கந்தக அமிலம் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்படும். எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை" என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று தெரிவித்திருந்தார். 

அதன்படி, இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "கந்தக அமிலம் கசிவு குறித்து துணை ஆட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி இன்று தொடங்கியுள்ளது. நாளை பிற்பகலுக்குள் இந்தபணி முடிக்கப்பட்டுவிடும். இது லேசான ரசாயனக் கழிவு தான். அமில வாயு வெளியேறமால் இருக்க பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இதுகுறித்து கவலைகொள்ள வேண்டாம்" என தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close