கிண்டி பண்ணையில் 50 முட்டைகளை இட்ட அரிய வகை மலைப்பாம்பு

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 03:04 pm
asian-python-laid-50-eggs-in-guindy-sanke-park

கிண்டி பாம்பு பண்ணையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஆசிய மலைப்பாம்பு 50 முட்டைகளை இட்டுள்ளது. 

சென்னை சிறுவர் பூங்காவிற்கு அருகே அமைந்துள்ளது அரசு பாம்பு பண்ணை. இங்கு அரிய வகை பாம்புகள், முதலைகள் மற்றும் கடல் அமைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறன. 

இந்த பண்ணையில் அழிந்து வரும் அரிய வகை இனமான ஆசிய மலைப்பாம்பு 50 முட்டைகளை இட்டுள்ளது. இதுகுறித்து பண்ணையின் நிர்வாகிகள் கூறும் போது, "தென்கிழக்கு ஆசிய மலைப்பாம்புகள் நிக்கோபார் தீவுகளில் உள்ள காடுகளில் அதிகம்காணப்படுகின்றன. இந்த இனத்தைச் சேர்ந்த மலைப் பாம்பு இங்கே வளர்க்கப்பட்டு வருகிறது. 25 வயது மதிக்கத்தக்க இந்தப் பாம்பு 14.5 மீட்டிர் நீளமும், 28 கிலோ எடையும் கொண்டது. இது தற்போது 50 முட்டைகளை இட்டுள்ளது. முட்டைகளில் இருந்து 63 நாட்களுக்கு பிறகு குட்டிகள் வெளிவரும். பின்னர் அந்த குட்டிகள் தனித்தனியாக வளர்க்கப்படும்" என்றார்.

மேலும் இந்த பாம்பு முட்டையிட்டதில் இருந்து எந்த உணவையும் சாப்பிடாமல் முட்டைகளையே சுற்றிக்கொண்டு இருப்பதாக பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக இங்கு பாராமரிக்கப்பட்டு வந்த 40 வயது மதிக்கத்தக்க ருக்மணி என்ற மலைப்பாம்பின் குட்டி இது. இந்த வகை பாம்புகள் 50-124 முட்டைகள் வரை இடுபவை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close