கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் கமல்

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 12:48 pm
kamal-registered-his-party-in-election-commission

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அவர் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை தொடங்கினார். மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அவர் அறிவித்தார். அதன் பின்னர் கட்சியை முறைப்பட்டி பதிவு செய்வற்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். 

அதை ஏற்ற தேர்தல் ஆணையம், கமலின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் எந்தவிட ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று கமல் இன்று டெல்லி சென்றார். அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தனது கட்சியை பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கூடிய விரைவில் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்" என்றார்.  

சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு குறித்து பேசிய அவர், " சுற்றுசூழலுக்காக போராடுபவர்களை கைது செய்வதை ஏற்க முடியாது" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close