தமிழகத்தில் அடிமை ஆட்சி: பாமக ராமதாஸ் ட்விட்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Jun, 2018 02:55 pm
slave-rule-in-tamilnadu-government-pmk-ramadoss-twitt

அடிமைகள் ஆரம்பத்திலேயே ஆள் வைத்து தாக்குவர். தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெறுகிறது’’ என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசை விமர்சித்துள்ளார். 

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், ’’சர்வாதிகாரிகளை விட அடிமைகள் ஆபத்தானவர்கள். சர்வாதிகாரிகள் சமாளிக்க முடியாத போது தான் தாக்குவர். அடிமைகள் ஆரம்பத்திலேயே ஆள் வைத்து தாக்குவர். தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெறுகிறது’ என விமர்சித்துள்ளார்.


ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் 18 எம்.எல்.ஏக்களுக்கு பங்கிட்டு கொடுப்பதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி நான் தவறாகப் பேசவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.


இதுகுறித்து மற்றொரு பதிவில் கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், ‘’சரி தான்... ஜெயலலிதா கொள்ளையடித்ததாகத் தானே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அதிமுகவைப் பொறுத்தவரை  கொள்ளையடிப்பது தவறானது இல்லை தானே?’’ எனத் தெரிவித்துள்ளார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close