#நிலம் எங்கள் உரிமை! ட்விட்டரில் ட்ரெண்டாகும் வீரதமிழச்சி!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 Jun, 2018 07:00 pm
nilamengalurimai-is-trending-in-twitter

#நிலம் எங்கள் உரிமை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கூடவே காலா பாட்டியும் ட்ரெண்டாகிவருகிறார்.

ஒவ்வொரு மனிதனின் ஆசையும் ஒரு நிலம் மற்றும் தனி வீடு மட்டுமே. நிலம் மட்டுமே நாம் அடையாளம். நிலம் மற்றவர்களுக்கு அதிகாரம் ஆனால் அதுதான் ஏழைகளின் வாழ்கை” இது காலாவில் ரஜினிகாந்த் பேசிய வசனங்கள் ஆனால் இன்றைய இணைய உலகின் ட்ரெண்டிங்கும் இதுதான்! 

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பசுமை வழிச்சாலை நிச்சயம் வந்தே தீரும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 


இதையடுத்து சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தற்போது விவசாய நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயத்தை அழித்து வரும் 8 வழிச் சாலை எங்களுக்குத் தேவையில்லை எனக்கூறி நில அளவீடு பணியில் ஈடுபடும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் குப்பனூர் கிராமமக்கள்.

விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லை என்றாலும், இது என்னுடைய நிலம், என்  பெயரில் உள்ளது என்றாவது இந்த நிலம் எங்களை வாழவைக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் விவசாய பெருமக்கள் ஏராளம். இந்த 8 வழிசாலை அமைக்கப்பட்டால் சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள சுமார் 28 கிராம விவசாய நிலங்கள் அழிக்கப்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் அடிமலையபுதூர் பகுதில் 8 வழிசாலைக்காக விவசாய நிலத்தில் முட்டு கல் நடும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி செய்திதாள்களில் வெளிவர, இணையத்தில் கண்டன மீம்ஸ் அனல் பறக்க ஆரம்பித்தது. 

போராட்டம் என தொடங்கினாலே கைது நடவடிக்கை தானா? என் நிலம் என் உரிமை! என் நிலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என அந்த மூதாட்டிக்கு எதிராக இணையவாசிகள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். நிலத்திற்காக போராடும் நான் சமூகவிரோதி என மூதாட்டி கூறுவது போன்ற மீம்ஸ்களும், விவாதங்களும் சமூக வலைதளங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளன.

இந்த மண்ணில் எதை அனுமதிக்க வேண்டும் எதை அனுமதிக்கக்கூடாது என முடிவெடுக்கும் உரிமை உழைக்கும் மக்கள் எங்களுக்கே அதிகம் இருக்கிறது. உடமைகள் பறிக்கப்படும்போது தமிழன் உயிரை பெரிதாய் மதிப்பதில்லை, மரணம் வரை போராடும் குணம் கொண்டவனாகிறான் என விவசாய கூக்குரல்கள் ஒலிக்கின்றன.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close