22-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 04:11 pm
22-06-2018-top-10-news

பி.இ.கவுன்சிலிங்: ரேங்க் லிஸ்ட் ஜூன் 28ம் தேதி வெளியீடு!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற உள்ளது.  இதில் 509 கல்லூரிகள் பங்கேற்கின்றன. ஜூலை மாதம் தொடங்கும் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு தென்னை மரத்துக்கு ரூ.50,000 விலை: சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

சேலம்-சென்னை இடையே உருவாக உள்ள 8 வழி பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நில கையகப்படுத்தும் சட்டத்தின்படி, சாலை அமைய உள்ள பகுதியில் உள்ளடங்கும் நிலங்களுக்கு மட்டுமின்றி, கிணறு மற்றும் மரங்களுக்கும் இழப்பீடு தரப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், சாலை அமைக்க விவசாயிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

காவலரைத் தாக்கிய  நாம் தமிழர் கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது!

தமிழகத்தில் காவிரி போராட்டத்தின் போது, சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் பணியில் இருந்த காவலர் ஒருவரை நாம் தமிழர் கட்சியை நிர்வாகி தாக்கினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து காவலரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதன்குமாரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

மாம்பழம் பறித்ததால் 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை

பீகார் மாநிலத்தில் தோப்பில் மாம்பழம் பறித்த 10 வயது சிறுவனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அட்டைப்பட வழக்கில் கேரள நீதிமன்றம் அதிரடி


கேரளவில் பிரபலமான வார இதழான கிரிஹலட்சுமியின் அட்டை படத்தில் தாயப்பால் ஊட்டுவது போன்ற புகைப்படம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அட்டைப்பட சர்ச்சை தொடர்பாக வார இதழ் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் ஆபாசம் பார்ப்பவர்கள் கண்களை பொறுத்தது என்றும் தெரிவித்துள்ளது. 

காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர் மாநிலம் இன்று அனந்த்நாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அந்த வீட்டில் 3 பேர் பதுங்கியிருந்ததாக தகவல் வெளியான நிலையில், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

'சர்கார்' போஸ்டர் டிசைன் காப்பியா? 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. 'சர்கார்' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது. விஜய் ரசிகர்கள் பட போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2015ம் ஆண்டு வெளியான ரன் ஆல் நைட் என்னும் படத்தின் போஸ்டர் டிசைனின் காப்பி என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். 

ஐ.பி.எல்-ல் 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் பெற்ற இரண்டு வீரர்கள்

2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனியும் ரோகித் சர்மாவும் ரூ. 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளனர். அடுத்தடுத்த இடத்தில் கம்பிர், விராட்கோலி, யுவராஜ் ஆகியோர் உள்ளனர். 

ஒப்பந்தம்படி இந்திய வீரர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை- பிசிசிஐ

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னிலை வகிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தில், பிசிசிஐ திருத்தம் மேற்கொண்டது. அதில் வீரர்களுக்கு ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் படி வீரர்களுக்கு அவர்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்று பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுதிரி தெரிவித்துள்ளார். 

799-வது வெற்றியை பதிவு செய்தார் நோவக் ஜோகோவிச்

லண்டனின் கென்சிங்டன் நகரில் புல் தரையில் நடக்கும் போட்டியான குயின்ஸ் கிளப் டென்னிஸ் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தரவரிசையில் 22ம் இடம் வகிக்கும், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தனது 799-வது வெற்றியை பதிவு செய்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close