’நாளைய முதல்வர் விஜய்...’ என்ன சொல்கிறார் செல்லூர் ராஜூ?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Jun, 2018 06:13 am
chief-minister-vijay-sellur-raju-openion

நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் ’நாளைய முதல்வர்’ என விளம்பரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரை வாழ்த்தியும் நாளைய முதல்வர் என போற்றியும் அவரது ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். அதிலும் மதுரையில் அவரது ரசிகர்கள் மூலைமுடுக்கெல்லாம் விதவிதமான போஸ்டர்களை ஒடி வைத்துள்ளனர். ரஜினி, கமல், வரிசையில் விஜயும் அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல். இதனால், அரசியல்வாதிகள் ’நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது’ எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை ஞானஒளிப்புரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்க்கு நாளைய முதல்வர் என பேனர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘’விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்’ என அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close