நடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் ட்ரம்ப்...’தெறி’க்கவிடும் ரசிகர்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Jun, 2018 07:30 pm
trump-to-invite-vijay-in-political-entry

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகளின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் விஜய் அரசியலுக்கு இன்னும் வலுச்சேர்ப்பதாய் இருக்கின்றன.  இந்த போஸ்டர்கள் கண்ணில் பட்டால் விஜய்யின் ரத்தம் சூடேறி உடனே களத்தில் குதித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

அரசியல் ஆசைகள் இருந்தும், அது குறித்து விஜய் இப்போது வரை வாய் திறக்கவில்லை. ஆனால் அவரது தந்தை மட்டும் அவ்வப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என ரசிகர்களுக்கு தகவல் கொடுப்பார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் அறிவிப்புக்கு பின் தங்களது தலைவரும் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற ஆசை விஜய் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து, கொடி அறிமுகம் செய்து வழிநடத்தி வருகிறார். முழுமையான இயக்கமாக அது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் இயக்கத்தின் இணையதளம் தொடங்கப்பட்டு பலரையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கும் அரசியிலுக்கும் தொடர்பில்லை என்றே அமைப்பை சேர்ந்தவர்கள் கூறினார்.

இப்படி எந்தப் பிடியும் கொடுக்காமல் ஓடிக் கொண்டிருந்த விஜய் சமீப காலமாக அரசியல் பேசத் தொடங்கியுள்ளார். சமீபத்திய‘மெர்சல்’ படம் அதற்கு உதாரணம். தமிழக பா.ஜ.க-வையே அலற விட்டு, இலவச புரமோசன் பெற்றுக் கொண்டவர். இப்படிப்பட்ட விஷயங்கள் அவரது அரசியல் அறிவிப்பு விரைவில் இருக்கும் என ரசிகர்களை நம்ப வைத்தது. ஆனால் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியானார்.

தொடர்ந்து மௌனமாகவே இருந்தார். மதுரை முழுக்க இன்றைக்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. “ஜூன் 22-ல் முடிவெடுக்கிறார் விஜய்” என்ற வாசகம் அதில் இடம்பெற்றிருக்கிறது. ‘தின விஜய்’ நாளேடு என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் அந்தச் சுவரொட்டிகளில் அதன் நிறுவனர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் என்றும், ’கர்நாடகா காரன் கதறணும்... ஆந்திராகாரன் அளறனும்.. தமிழந்தான்டா ஆளனும்..’ என ஒவ்வொரு சுவரொட்டிகளும் உற்சாகம் கூட்டுகின்றன.

எம்.ஜி.ஆருடன் விஜய் இருக்கும் ஒரு போஸ்டரில், ’இவர் இடத்தை நிரப்ப யாருண்டு... தளபதியை தவிர வேறு எவருண்டு.. தளபதி எண்ட்ரி...’’ என்றும் மற்றொரு போஸ்டரில், ‘ 2021 சட்டமன்றத்தில் உங்கள் குரல், தமிழக மக்களின் உரிமைக்குரல்’’ என்றும் அரசியல் வசனங்கள் அனல் பறக்கும் போஸ்டர்கள் மதுரை முழுவதும் பளிச்சிடுகின்றன. இன்னும் உச்சமாக ‘கோட்டையும், கொடியும் நொடியில் மாறும்... நீங்கள் அரசியலுக்கு வந்தால்... என  விஜயிடம்  நேரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்துவதாக ஒருபோஸ்டர்...’’ ரசிகர்களின் கற்பனை ரசனையில் ஆழ்த்துகிறது. 


மதுரையின் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் இந்தச் சுவரொட்டிகளை  எளிதில் நம்மால் கடந்து செல்லமுடியவில்லை. ஏனெனில் அரசியல் மாற்றங்களின் களமாக மாறிப் போயிருக்கிறது  மதுரை. விஜயகாந்த் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தியது இங்குதான். கமல் தனது‘மக்கள் நீதி மய்ய’த்தின் அறிவிப்பை அங்குதான் வெளியிட்டார். டிடிவி தினகரனின் அமமுகவும் அங்குதான் பிறந்தது. விஜய்யின் கட்சியும் ஏன் அங்கே அறிவிக்கப்படக் கூடாது? என்ற கேள்வி மதுரைவாசிகளுக்கு எழுந்திருக்கிறது.

மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை பொருத்தவரை, விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டேயிருக்கும் இளம் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது! இதற்கெல்லாம் நிச்சயம் விடை தருவார் விஜய்... ஆனால், எப்போது? என்பதுதான் இப்போதைய கேள்வி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close