23-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

  முத்துமாரி   | Last Modified : 23 Jun, 2018 05:24 pm
23-06-2018-newstm-top-10-news

'சர்கார்' படத்தில் சிகரெட் காட்சியை நீக்குக - ராமதாஸ் வலியுறுத்தல்!

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் சிகரெட் புகைக்கும் காட்சியை உடனே நீக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  மேலும், அவர்  "பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதைவிட மோசமானது இச்செயல்.. இதைப்பார்த்து சிறுவர்கள் புகைக்கு அடிமையாகி விட மாட்டார்களா? இதுதான் ரசிகர்களுக்கு விஜய் காட்டும் நல்வழியா?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது: ஆளுநரை விளாசிய ஸ்டாலின்!

நாமக்கலில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டிய தி.மு.கவினர் 192 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை எதிர்த்து தி.மு.கவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும்  ஈடுபட்டதால் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினரை போலீசார் கைது செய்தனர். 'மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆளுநர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை!

மகாராஷ்டிராவில் கடந்த மார்ச் 23ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், பயன்பாட்டிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ. 25,000 அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பதவிக்காக மு.க.ஸ்டாலின் நடத்திய யாகம்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி சென்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று அர்ச்சகர் சுந்தர் பட்டரால் சுக்ரப்ரீத்தி யாகம் நடத்தினார். வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை அடைய வேண்டும் என இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. 

அமர்நாத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம்?

அமர்நாத் புனித யாத்திரையை செல்லும் வழியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு வருகிற ஜூன் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிக்கொலை!

கர்நாடக மாநிலம் சிக்மகலூரில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், பா.ஜ.கவினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியாவில் மதகுருவுக்கு மரண தண்டனை!

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 2016ம் ஆண்டு, ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்படுத்தியதாக அமன் அபுர்ரகுமான் (46) என்ற மத குரு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிறைத்தண்டனை மத குருவுக்கு மரண தண்டனை விதித்து ஜகார்த்தா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

வடகொரியாவால் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதங்களில் பயன்படுத்த தக்க அணுசக்தி மூலப்பொருட்களின் இருப்பும், வடகொரிய அரசின் கொள்கைகளால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் வெளியுறவு கொள்கைக்கும் அசாதாரண அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவை விட்டு பிரியா விடை பெறும் விராட்! 

இன்று லண்டன் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா வழியனுப்பி வைக்கும் புகைபடங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணியுடன் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று லண்டன் பயணிக்கின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம்

கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கமல் நடிப்பில் சமீபத்தில் வந்த ’தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close