பசுமை வழிச் சாலையால் பாதிப்பு... சு.சுவாமி சொல்கிறார்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Jun, 2018 11:34 pm
we-will-give-our-full-support-to-tn-governor-subramanian-swamy

ஆளுநருக்கு சட்டம் தெரியும் பணத்தின் மீது ஆசை இல்லாதவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி, “சென்னை- சேலம் பசுமை வழிச்சாலையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிகிறது அதனால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் இன்று அல்லது நாளை சந்தித்து இதுகுறித்து பேசவுள்ளேன். பாதிப்பு என தெரிந்தும் அதை செயல்படுத்துவதிலிருந்து சேலம் எம்.பி உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 நாடளுமன்ற உறுப்பினர்கள் யாரும் மக்கள் பிரச்னைகள் குறித்து டெல்லியில் குரல் கொடுப்பதில்லை என நன்றாக தெரிகிறது. ஆகையால் நான் வலியுறுத்த உள்ளேன்.

தமிழக ஆளுநருக்கு சட்டம் தெரியும். அவர் முறையாக தான் செயல்படுகிறார். அவருக்கு பண ஆசை இல்லை. எனவே நாங்கள் முழு ஆதரவை அளிப்போம். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு வேறு வேலை இல்லை. இந்த ஆளுநர் மீது எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை உண்டு. ஆகையால் ஆளுநரை நாங்கள் மாற்றமாட்டோம்” என கூறினார்.

முன்னதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆளுநர், பல திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close