காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது- ஜெயக்குமார்

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Jun, 2018 10:25 pm
minister-jayakumar-tell-about-cauvery-issue

காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் இனி எதுவும் நடக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “காவிரி விவகாரத்தில் சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாமல் அரசியல் ரீதியாக குமாரசாமி பேசி வருகிறார். இனி அவர் அழுது புலம்பினாலும் காவிரி விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் முறையாக கொடுக்கப்படும். விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கப்படும். அழிக்கப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக மரக்கன்றுகள் நடப்படும்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா, கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தது கூட்டணிக்கு அச்சாரம் போட்டதாக தெரிகிறது. செய்தியாளர்கள் எவ்வாறு செய்தி சேகரிக்க ஆய்விற்கு செல்கிறார்களோ, அதேபோல தூய்மைப்பணிக்கு ஆளுநர் ஆய்விற்கு செல்கிறார். இதனை கண்டித்து தி.மு.க-வினர் மக்களை தூண்டி போராட்டத்தை நடத்திவருகின்றனர்” என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close