ஃபேஸ்புக்கில் பழகி 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2018 07:54 pm
14-year-old-girl-sexually-abused-by-facebook-friend

ஃபேஸ்புக் மூலம் பழகி 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சென்னையை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ராகுல்குமார், ஃபேஸ்புக் மூலம் 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார்.சிறுமியிடம் நட்பாக பழகிய அவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர், அதுபற்றி வெளியில் சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார். பின் பணம் மற்றும் 20 சவரன் நகைகளை பறித்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close