ஸ்ரீரங்கம் போனால் சிஎம் ஆகிவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார் -ஜெயக்குமார்

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Jun, 2018 08:03 pm

jayakumar-criticise-on-mk-stalin

குமாரசாமி முதல்வரானது போல் தானும் ஆக வேண்டுமென்று  நினைத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  “பக்தி விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது புரியவில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று குமாரசாமி முதல்வரானது போல் தானும் ஆக வேண்டுமென்று  நினைத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றிருக்கிறார்.ஸ்ரீரங்கம் போனால் மட்டும் சிஎம் ஆக முடியாது. மக்கள் நினைத்தால்தான் சிஎம் ஆக முடியும்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ரகசிய இருப்பதாக சொல்வது உண்மையல்ல அதை நாங்கள் முழுவதுமாக மறுக்கிறோம் அவர் சொல்வது கவுண்டமணியின் வாழைப்பழம் நகைச்சுவை போல் உள்ளது. திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது அப்போது அவர்கள் இருவருக்கும் இருந்த உறவு எந்த மாதிரியான உறவு என்பதை அவர் விளக்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை எம்ஜிஆர் காலத்தில் இருந்து எதிர்கட்சியான திமுகவை எதிரியாக மட்டுமே பார்த்து வருகிறோம்.  அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு நான் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close