• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

சென்னையில் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பதிவு

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 12:41 pm

prof-nirmala-devi-s-voice-sample-recorded-today-in-chennai

மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் குரல் மாதிரி இன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசிய ஆடியோ ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, கடந்த ஏப்ரல் 17ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இதைத்தொடர்ந்து அவர் மாணவிகளுடன் பேசிய ஆடியோவின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில், அவரை சென்னைக்கு அழைத்துச்செல்ல சிபிசிஐடி போலீசார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி கோரினர். இதற்கு மதுரைக்கிளையும் அனுமதி அளிக்கவே, மூன்று நாட்களுக்கு நிர்மலா தேவி சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.  நேற்று காலை சென்னை வந்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதையடுத்து, இன்று காலை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்தில் அவரின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டது. நிர்மலா தேவியை வெவ்வேறு விதமாக பேச வைத்து அவரது குரல் மாதிரியை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர். இதன்பின்னர், அவர் பேசிய ஆடியோவுடன், குரல் மாதிரி ஒப்பிடப்பட்டு அதற்கான அறிக்கை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close