எலக்ட்ரிக் கார்களை வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு

  திஷா   | Last Modified : 01 Jul, 2018 09:34 am
tneb-to-buy-electric-cars

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தா வண்ணம், மின்சார வாரியத்திற்கு  'எலக்ட்ரிக்' கார்களை பயன்படுத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு. 

'எனர்ஜி எபிஷியன்சி' எனும் மத்திய அரசு நிறுவனம், குறைந்த மின்சார உபயோகத்தில் இயங்கும், எல்.இ.டி., பல்பு உள்ளிட்ட மின் சாதனங்களை, விற்பனை செய்து வருகிறது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துமாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கார்களால் புகை மாசுவை கட்டுப்படுத்த முடியும். இதற்காக, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், எலக்ட்ரிக் கார்களை, ஆந்திரா, டில்லி உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, சப்ளை செய்கிறது. இந்தக் கார்களுக்கு, தவணை முறையில் பணம் செலுத்தினால் போதும். 

இந்நிலையில், எனர்ஜி எபிஷியன்சியிடம் இருந்து, எலக்ட்ரிக் கார்களை வாங்க, தமிழக மின் வாரியமும் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் "வீடுகளுக்கு, 'ஸ்மார்ட்' மீட்டர், எலக்ட்ரிக் கார் தொடர்பாக, எனர்ஜி எபிஷியன்சி அதிகாரிகளுடன், சமீபத்தில், வாரிய உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினோம். இது தொடர்பாக, மத்திய அரசு, டில்லியில் நடத்திய கூட்டத்திற்கும், பொறியாளர்கள் சென்று வந்தனர். இந்த எலக்ட்ரிக் கார் பயன்பாடு குறித்து, போக்குவரத்து ஆணையரகத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டது.விரைவில், சோதனை ரீதியாக, இரண்டு - மூன்று பேட்டரி கார்கள் பயன்படுத்தவும், பிறகு அதை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close