ஓ.எம்.ஆர் சாலையின் சுங்கக் கட்டண உயர்வு - இன்று முதல் அமல்

  திஷா   | Last Modified : 01 Jul, 2018 09:35 am
omr-toll-tax-goes-up

சென்னையின் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் 10 சதவீதம் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
 
ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், இ.சி.ஆர் இணைப்பு சாலை, மேடவாக்கம், நாவலூர் ஆகிய 5 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. முந்தைய இங்கு ஆட்டோவில் ஒருமுறை பயணிக்க ரூபாய் 9-ம், சென்று திரும்பி வர ரூபாய் 17-ம், ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூபாய் 30-ம், மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூபாய் 280-ம் வசூலிக்கப் படுகிறது. தற்போது இந்தக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

ஆனால், நான்கு சக்கர வாகனத்தில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் கார்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூபாய் 25-ல் இருந்து 27 ஆகவும், சென்று திரும்பி வரும் கட்டணம் ரூபாய் 50-ல் இருந்து 54 ஆகவும், ஒருநாளில் பலமுறை பயணிக்கும் கட்டணம் ரூபாய் 80-ல் இருந்து 90 ஆகவும், மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூபாய் 1950-ல் இருந்து 2150 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

2 ஆண்டுகளுக்கு முன்பு 2016 ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு இன்று இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்திருக்கும் இந்த சாலையின் சுங்கக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close