விஜயை அரசியலுக்கு அழைக்கும் கமல்ஹாசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Jul, 2018 01:43 am
kamal-haasan-tweets-for-ask-kamal-haasan-events

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டா் பக்கத்தில் ரசிகா்கள், கட்சி உறுப்பினா்கள், பொதுமக்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினார். அதன்படி #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கில் அனைவரும் கேள்விகளை எழுப்பினா். அதற்கு கமல்ஹாசன் ட்விட்டரிலே பதில் அளித்துள்ளார். 

முதலில் உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா? என்ற கேள்விக்கு... 

“எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என பதிலளித்துள்ளார். 

ஆண்டவா உங்கள் அனைத்து திரைப்படங்களையும் ஒவ்வொன்றாக டிஜிட்டல்படுத்தி ரி ரிலீஸ் செய்யனும்... (ராஜ்கமல் படங்கள் கண்டிப்பாக)... #AskKamalHaasan செய்வீர்களா??? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு...

நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக விரைவில் வரவிருக்கிறது! என பதிவிட்டுள்ளார். 

@ikamalhaasan நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்ற கேள்விக்கு...

நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன் என கூறியுள்ளார்.

சார் போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்க சொன்னது "ஒரு முகத்து மேல இன்னொரு முகத்த போஸ்டரா ஒட்ட முடியாது", ஆனா உங்கள பாரதியாரா சித்தரிக்கப்பட்ட  புகைப்படத்தை உங்கள் ட்விட்டர் பக்கத்தில் Profile Picture ஆ வச்சிருக்கீங்க. இதற்கு பிரத்யேக காரணம் ஏதும் உண்டா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு...

எனது தகப்பன் முகத்தை என் முகத்தில் பொருத்திப்பார்ப்பதில் தவறில்லை என பதிலளித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close