மு.க.ஸ்டாலின் யாகம்... சிக்கலில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 02 Jul, 2018 02:22 pm

srirangam-temple-administrators-in-trouble

தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்காக யாகம் நடத்தியதால் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகளை இடமாற்றம் செய்ய ஆளும் தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க, செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்  கடந்த மாதம்  21ம் தேதி திருச்சி சென்றார். அப்போது ஸ்ரீரங்கம் சென்ற அவருக்கு பட்டர்கள் பூர்ண கும்ப மரியாதையை வழங்கினர். அதனை ஏற்றுக்கொண்ட ஸ்டாலினுக்காக ஏற்கெனவே சுக்ர ப்ரீத்தி யாகம் நடைபெற்றதாக கூறப்பட்டது. கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி ஸ்ரீரங்கம் வந்து சுக்ர ப்ரீத்தி யாகம் செய்ததால் அவர் அவருக்கு முதல்வர் பதவி கிடைத்ததாக கூறப்படும் நிலையில், ஸ்டாலினுக்காக அதே யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தி.மு.க கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்கும் இயக்கம் என்பதால் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றது பெரும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், ஸ்டாலின் முதல்வராக வேண்டி பூஜை நடத்திய கோயில் நிர்வாகிகள் மீது கடும் ஆத்திரத்தில் ஆளும் கட்சி இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்கட்சி தலைவராக இருக்கும்  மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டி நடத்தப்பட்ட யாகத்திற்கு கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக நினைக்கும் ஆளும் அ.தி.மு.க தரப்பு கோயில் நிர்வாகிகள் சிலரை இடமாற்றம் செய்து அவர்களை தண்டிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close