பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து இல்லை: அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 11:10 am

ration-card-won-t-be-cancelled-if-people-didn-t-get-goods-from-ration-shops-continuously-3-months-says-minister-kamaraj

3 மாதங்களுக்கு ரேஷன்  பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

டெல்லியில் கடந்த ஜூன் 30ம் தேதி  மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். மாநாடு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்வான், "மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து அவர்களின் குடும்ப அட்டையை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அதேபோன்று ரேஷன் பொருட்கள் தேவைப்படாத பொருளாதார நிலையில் உயர்ந்த குடும்பங்களின் அட்டையையும் ரத்து செய்யலாம்" என தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், 3 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு செல்லுபடியாகும், தொடர்ந்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close