தமிழகத்தில் மோடியை யாரும் பாராட்டதது ஏன்?- பொன். ராதா

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Jul, 2018 06:06 pm
why-do-not-anyone-appreciate-modi-in-tamil-nadu-says-ponradhakrishnan

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என ஏற்கனவே பிரதமர் மோடி பேசியுள்ளார் அப்போது தமிழகத்தில் யாரும் பிரதமரை பாராட்டதது ஏன் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “யாத்திரை சென்ற இந்தியர்கள் 1300 பேரை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேபாளம் சென்ற தமிழர்களை மீட்க பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ் உணர்வை விட, பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீது அதிக அக்கறை இருக்கிறது. சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என ஏற்கனவே பிரதமர் மோடி பேசியிருந்தார். அப்போது ஏன் தமிழகத்தில் யாரும் பிரதமரை பாராட்டவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது தி.மு.க தமிழுக்கு பெருமை சேர்க்கவில்லை எனவே தி.மு.க-வினர் தமிழ் உணர்வை பற்றி பேச தகுதியில்லை. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். டி.ஜி.பி நியமனம் விவகாரத்தில் தேவையற்ற முறையில் பதவி நீட்டிப்பு செய்யக் கூடாது" என்றார். 

முன்னதாக மத்திய அரசின் இணைய வழி நூலகத்தில் தென்னக மொழிகள் அனைத்தும் புறக்கணித்துவிட்டதாகவும், நூலகத்தில் தமிழக வரலாற்று நூல்கள் இல்லை என்றும் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் நூல்கள் மட்டுமே உள்ளதாகவும் குற்றஞ்சாட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close