அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்! - ஒரு மாதம் தங்க முடிவு

  சுஜாதா   | Last Modified : 05 Jul, 2018 11:58 am
vijayakanth-arrives-to-america

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக வருகிற 7-ந் தேதி (சனிக் கிழமை) அமெரிக்கா செல்கிறார்.

உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் நடிகர் விஜயகாந்த், தே.மு.தி.க சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சரி வர பேசமுடியாமல் அள்ளல்படுகிறார். இதனை தொடர்ந்து அவ்வப்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தவருக்கு, உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேமலதாவும் செல்கிறார். 

ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறும் விஜயகாந்த், அடுத்த மாதம் (ஆகஸ்டு) தனது பிறந்தநாளான 25-ந் தேதிக்குள் இந்தியா திரும்புவார் என்று தே.மு.தி.க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close