05-07-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 09:30 am
05-07-2018-today-s-top-stories

சென்னை, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. 

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத், வழக்கம் போலவே தேர்தல்கள் நடைபெறும் என கூறியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான புதிய அரசு, இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. 

கடும் நிலச்சரிவுகள் காரணமாக அமர்நாத் யாத்திரை சென்ற 5 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை முடக்கப்பட்டுள்ளது 

பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், வரும் 7ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். 

வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close