05-07-2018 நியூஸ்டிஎம் இன்றைய முக்கியச் செய்திகள்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 03:42 pm
05-07-2018-newstm-top-10-news

இன்றைய நாளுக்கான டாப் 10 செய்திகள்!

மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு மத்திய பூங்கா, வணிக வளாகம் உள்ளிட்ட நகர்ப்புற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 

பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் அவசியம்

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டும் காரில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிவதை பொதுமக்கள் பின்பற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், "இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட், அதே போன்று கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது அவசியம்.  இது தொடர்பான சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை  காவல்துறை மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 3ம் தேதி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 18ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

சத்துணவு காண்ட்ராக்டர் அலுவலகத்தில் ரெய்டு!

தமிழக அரசின் பள்ளி சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு முட்டை உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்கும் கிருஷ்ட்டி நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில்  உள்ள அந்நிறுவனத்தின் பல அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த அதிரடி சோதனையில், 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

'டக்'கென விற்றுத் தீர்ந்த தீபாவளி ரயில் டிக்கெட்!

நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான 2ம் தேதிக்கான முன்பதிவு இன்று துவங்கி, சுமார் 7 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்ததால், பல பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்!

மத்திய நீர்வளத்துறை தலைமை பொறியாளர் நவீன்குமார் தலைமையில் இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது.  தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில தலைமை பொறியாளர்கள் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். தமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றுள்ளார். மேலும், இதன் அடுத்த கூட்டம் ஜூலை 19ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனந்தா புஷ்கர் வழக்கு: சஷி தரூருக்கு முன்ஜாமீன்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு சம்பந்தமாக வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சஷி தரூருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் சசி தரூர் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில்,  முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சஷி தரூர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சூர்யாவுடன் இணைந்த ஆர்யா!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவனின் ‘NGK’ மற்றும் கே.வி.ஆனந்த் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் சூர்யாவின் கரியரில் 37-வது படம். இந்த படத்தில் ஆர்யாவும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கையை படமாக்கும் வெங்கட் பிரபு

சிம்புவை வைத்து படம் இயக்க உள்ள வெங்கட் பிரபு அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக வெங்கட் பிரபு முத்தையாவை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. 

கொலம்பிய வீரர்களுக்கு கொலை மிரட்டல்!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட கொலம்பிய வீரர்களுக்கு அந்நாட்டு கால்பந்து ரசிகர்களே  கொலை மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீரர்களை நாடு திரும்ப வேண்டாம் என்றும் மீறி கொலம்பியா வந்தால் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டல்கள் வந்ததுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close