சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 12:23 pm
bomb-threat-to-chennai-dgp-office

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டது. 

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சென்னை கடற்கரை சாலையில் உள்ளது. அங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து மர்மநபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அழைத்து பேசிவிட்டு, உடனே தொடர்பை துண்டித்துள்ளார். 

இதனையடுத்து அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மிரட்டல் விடுத்த நபர், போலீசாரை தொடர்பு கொண்டு பேசிய எண்ணை வைத்து அவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close