6.7.2018 நியூஸ்டிஎம் இன்றைய டாப் 10 செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 05:26 pm
6-7-2018-top-10-news

இன்றைய நாளுக்கான முக்கிய செய்திகள்...

சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிப்புக்கு  இந்தாண்டு 1,59,631 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து ரேண்டம் எண், தர வரிசை பட்டியல் ஆகியன வெளியிடப்பட்டன. தொடர்ந்து சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. 3 நாள் நடைபெறும் இந்த கலந்தாய்வின் முதல் நாளான இன்று, காலை 9.15 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜூலை 22ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிகையாளர்களை அவதூராக விமர்சித்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் வரும் 20ம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜாராக வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் உத்திரவிட்டார். மேலும் ஆஜராகும் போது நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதாக உத்தரவாதம் எழுதி தர வேண்டும் எனவும் நீதிபதி கூறி உள்ளார். 

சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று காலை, காவல் துறை கட்டப்பாட்டு அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்மநபர், டி.ஜி.பி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வழக்கம்போல புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு தடை விதிக்க முடியாது

8 வழிச்சாலைக்காக தருமபுரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி, "சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை என்பது நல்ல திட்டம் தான். எனவே நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது" என தெரிவித்தார்.

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே!

தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்குவதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு என்று ஒரு சில அதிகாரங்கள் உள்ளன. யாருக்கு எந்த வழக்குகளை ஒதுக்க வேண்டும் என்பது அவருக்கே உரிய அதிகாரம். உச்ச நீதிமன்ற விதிமுறைகளின்படி தான் அவர் வழக்குகளை ஒதுக்கி கொடுக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கெல்லாம் தலைவர் தலைமை நீதிபதி தான் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சூதாட்டத்தின் மீதான தடையை நீக்குக

விளையாட்டுப் போட்டிகளை மையமாக கொண்டு நடத்தப்படும் சூதாட்டங்களின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

விஜய்யின் சர்காருக்கு எதிராக சுகாதாரத்துறை நோட்டீஸ்!

விஜய் புகைப்பிடிப்பது போன்ற சர்கார் படத்தின் போஸ்டரை நீக்காவிட்டால் மீது உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய்க்குநோட்டீஸ் அனுப்பி உள்ளது.

விம்பிள்டனில் இருந்து முகுருசா வெளியேற்றம்

லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாவது சுற்றில் நடப்பு சாம்பியன் முகுருசா, 47-வது இடம் வகிக்கும் பெல்ஜியம் வீராங்கனை அலிசன் வானுடன் மோதினார். இதில் முகுருசாவை 5-7, 6-2, 6-1 என்ற கணக்கில் அலிசன் வான் வென்றார். 

500வது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறார் தோனி!

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று கார்டிப் நகரில் நடக்கிறது. இது இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனியின் 500வது சர்வதேச டி20 போட்டியாகும். 

மெக்சிகோ பட்டாசு ஆலையில் கொடூரம்; 19 பேர் பலி!

மெக்சிகோ நாட்டில் பட்டாசு உற்பத்திக்கு பேர்போன டுல்டிபெக் நகரில் உள்ள ஒரு சிறிய பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை காப்பாற்ற போலீசாரும் தீயணைப்புப் படை வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஆலை மீண்டும் வெடித்தது. தீயை அணைக்கவும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தவர்கள் இதில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close