கிறிஸ்டி நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்! கேஷியர் தற்கொலை முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 10:21 am

it-raid-in-christry-company

தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று நிறுவனத்தின் கேஷியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிப்பாளையத்தில் உள்ளது கிறிஸ்டி நிறுவனம். தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தேவையான பருப்பு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தில் நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த எழுந்த புகாரின் அடிப்படையில் நடந்த இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரொக்கமாக ரூ.4 கொடிவ் வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, நிறுவனத்தின் கேஷியர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவர் மாடியில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை அதிகாரிகள் தடுத்து மீட்டனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close