ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ரூ.10,000 கோடி செலவாகும்- திருச்சி சிவா

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jul, 2018 07:08 pm

tamil-nadu-parties-divided-on-simultaneous-elections-says-trichy-shiva-mp

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என  திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.  நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து திமுகவின் கேள்வி ஜனநாயகமா, பணச்செலவா என்பதுதான். மாநிலங்களின் அதிகாரத்தை பறிபோகும் இந்த திட்டத்தை திமுக ஏற்றுக்கொள்ளாது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை தத்துவமான கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் நோக்கமாக உள்ளது. சட்டமன்றம் மட்டுமல்லாமல் மக்களவையும் 5 ஆண்டுகள் நீடிக்குமா? என்பது சந்தேகம் தான்! ஒரு வேளை மக்களவை கலைந்துபோனால் சட்டமன்றத்தையும் கலைத்துவிடுவார்களா?

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் கொண்டுவர வேண்டுமென்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. அது தவறு, என்பதை சுட்டிக் காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட ஆணையத்திற்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close